நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கண்டித்து நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் பேசிய விஷயங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அவருக்கு தற்போது திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்போது அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய நிலையில் இதற்கு திமுக அரசே காரணம் என்று கூறினார். அதோடு கூடுதலாக சில வார்த்தைகளையும் சேர்த்து பேசியதோடு கட்சியில் நாங்கள் பிசிரு என்று கூறுவோம். அதேநேரம் அவரையே உசுரு என்றும் கூறுவோம். இதனால் உனக்கு என்ன பிரச்சனை என்பது போல் கூறியிருந்தார்.

அதோடு நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை கண்காணித்து அதை வெளியிடுவது தான் ஐபிஎஸ் படித்தவர்களின் வேலையா என்றும் கேட்டார். இப்படி அவர் தமிழக அரசையும் காவல்துறையினரையும் விமர்சித்து பல்வேறு விதமாக பேசியிருந்தார். மேலும் சீமானின் இந்த பேச்சுகள் இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டான நிலையில் தற்போது திருச்சி எஸ்.பி வருண்குமார்  அவருக்கு வக்கீல் மூலமாக கிரிமினல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதோடு இதுபோன்ற மோசமான பேச்சுகளை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு எனக்கு ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் மேடையில் இது போன்று அவதூறாக பேசுவதை தமிழக மக்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.