ஈழத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான அமிர்தாஸ் என்பவர் சீமானுக்கும் எல்லலான் படத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று கூறிய நிலையில் பிரபாகரனின் அண்ணன் மகன் ஆன கார்த்திக் மனோகரனும் சீமானுக்கும் பிரபாகரனுக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். இதேபோன்று எல்லளான் படத்தில் 7 மாதங்களாக ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷும் சீமான் பிரபாகரன் சந்திப்பு பற்றிய உண்மையை கூறினார். இதேபோன்று தற்போது அந்த படத்தில் ஒளிப்படக்கலை  பொறுப்பாளராக பணியாற்றிய அமிர்தாசும் சீமான் பொய்களை புட்டு புட்டு வைத்துள்ளார். அதாவது இலங்கைக்கு வந்த சீமான் அந்த படகு குழுவினரோடு தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அவர் சில விடுதலை புலிகள் இயக்கத்தினரையும் சந்தித்து பேசி உள்ளார். மற்றபடி அவருக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் 2 வார  பயண அனுமதியுடன் மட்டுமே இலங்கைக்கு வந்து அங்கு தங்கி இருந்த நிலையில் பின்னர் தமிழ்நாட்டிற்கு திரும்பி சென்று விட்டார். அவர் ஒரு மாதம் வன்னியில் இருந்ததாக கூறுவது முற்றிலும் பொய். அவர் வெள்ளை மேலாடை அணிந்து ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் போட்டோ ஷூட் காக எடுக்கப்பட்டது எனவும் அது ஆயுதப் பயிற்சிக்காக எடுக்கப்பட்டது என்று அவர் பொய் சொல்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் இனியாவது தன்னுடைய ஈழப்பயணம் குறித்த புனைக்கதையை தன்னுடைய சுயலாபத்திற்காக இப்படி சீமான் பொய்களாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.