சிறகடிக்க ஆசை சீரியலின் நடிகை கோமதிப்பிரியா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. இவர் மற்ற நடிகைகளை போல அல்லாமல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

இந்த சீரியலில் சீரியல் ஹீரோயினாக இருக்கும்  இவர் குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதை அழகாக சீரியலில் காட்டியுள்ளார்கள். இந்த நிலையில் சீரியலை போன்று சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா தற்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.