
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது நெஞ்சத்தை கிள்ளாதே. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 17ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. திடீரென சீரியலை முடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நடிகை ரேஷ்மா ஒன் லாஸ்ட் டைம் நல்ல பண்ணிட்டீங்க, உண்மை கண்டிப்பா வெளியில் வரும். நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் ஆகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை எனக்கு காலில் ஆபரேஷன் செய்ததால் தான் சீரியலில் நடிக்க முடியவில்லை. ஒரு வாரம் சீரியலில் இல்லாததால் பலரும் கதாநாயகன் இல்லாமல் கதை நன்றாக இல்லை என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
எனக்கு பதில் வேறு நடிகரை வைத்து சீரியலை தொடர சொன்னபோது அதற்கு குழு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் சீரியல் முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் நீங்கள் இல்லாமல் சீரியல் நன்றாக இல்லை என்று யார் சொன்னது சார்? அந்தந்த நடிகர்கள் அவர்களின் காட்சிகளை கச்சிதமாக நடித்து சீரியல் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் நன்றாக இருந்ததற்கு நீங்கள் மட்டும்தான் காரணம் என்று தற்பெருமை பேசுகிறீர்கள் அனைத்து நடிகர்களும் நன்றாக தான் நடித்தார்கள். அதனால் தான் சீரியல் நன்றாக இருந்தது என்று பதிலடி கொடுத்துள்ளனர்.