பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான டெபோரா பிக்சோடா தனது முகத்தில் மலத்தை பூசி தோல் பராமரிப்பு செய்வதாக கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனது தோலின் இளமையைப் பாதுகாக்க மலத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தனது தோல் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

முகத்தில் மலத்தை பூசும்போது நாசிக்கு கிளிப் போட்டு நாற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் அதை கழுவினதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இவரது இந்த செயலுக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் தோலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.