நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடும் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சுந்தரர் தின விழாவில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பியுள்ளது.

அதில் அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட வேண்டும். அதன் பிறகு தேசியக் கொடியை தலைகீழாகவோ அல்லது கிழிந்த கொடியை ஏற்றக்கூடாது. இதனையடுத்து பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள் மற்றும் மலர்கள் போன்றவற்றை கொண்டு அலங்கரிப்பதோடு பெற்றோர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம். மேலும் தேசிய கொடியை ஏற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.