கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த வாலிபரும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வருடங்களுக்கு மேலாக லிவிங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையுடன் கருகப்பள்ளி பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது திடீரென குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அப்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தலையில் அடிபட்டது தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியிடம் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில் அவர்கள் தான் குழந்தையை கொன்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் குழந்தையை கொன்றதுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.