கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகள் வாங்கி விட்டால் கட்சியை கலைத்து விட்டு சென்று விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்த்தது போல வேறு எந்த மாநிலத்திலும் தலைவர்கள் எதிர்க்கவில்லை.

எதற்கும் துணிந்து ஸ்டாலின் இதை செய்து வெற்றியை ஈட்டி இருக்கிறார். சீமானுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை உள்ளவர் என நான் நம்புகிறேன். எனவே அவர் சொன்னது போல கட்சியை கலைத்துவிட்டு செல்லட்டும் என்று கூறியுள்ளார்.