
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை போட்டி போட்டு வாங்குகிறது. அந்த வகையில் கடந்த முறை உலக கோப்பை இறுதிவரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்களையும் நல்ல விலைக்கு அணிகள் வாங்குகிறது.
அந்த வகையில் தற்போது தென்னாபிரிக்க அணியை சேர்ந்த அன்ரிச் நார்ட்ஜேவை 6.50 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. மேலும் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 3:30 மணியிலிருந்து 8.30 மணி வரை 5 மணி நேரத்தில் மொத்தம் 33 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக நீங்கள் 349 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.