
தமிழ்நாடு அரசு நடத்தும் ஆவின் நிர்வாகம் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மாட்டும் ரூ.524 கோடி மதிப்பில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.
இந்த விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளராக நியமித்து அவர்கள் மூலம் ஆவின் பொருட்கள் விற்கப்பட்டது. இதன் மூலம் சுமார் விற்பனையின் விகிதம் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஆவின் பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டப்படுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 8 முதல் 9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.