தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள். இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. மேலும் தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை வழங்க வேண்டும் என சிவகாசி பட்டாசு ஆலை சங்கத்தின் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.