
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் உதகையில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது.
அந்தவகையில் இந்த வருடம் தொடங்கிய மலர் கண்காட்சியானது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், வரும் 26ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.