
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உள்ள சிறுவர் சிறுமிகளின் அறிமுகம் என் குரலின் கதை என்ற தலைப்பில் காணொளி வெளியாகி மக்களை கவர்ந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோ காட்சி வெளியாகி இருக்கிறது. இதில் பல சிறுமிகள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் பார்வையற்ற சிறுமியான புரோகிதா.
இவர் பாடிய வழி நெடுக காட்டுமல்லி என்ற பாடல் நடுவர்களை மட்டுமல்லாமல் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் பாடகி சித்ரா அந்த சிறுமையை சந்தோஷப்படுத்த அவருக்கு பொம்மை கொடுத்ததோடு அவரோடு அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.