கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே பெரியாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 4 மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

கடந்த 1-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. அங்கன்வாடியில் முன்பருவக் கல்வி முடித்து வரும் அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் கட்டாயம் சேர்க்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.