
நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 529.46 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியா முழுவதும் ரூ.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ் படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் விரைவில் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனம் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஜெயிலர் படம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. அதாவது அண்ணாத்த படம் வெளியான தேதியை குறிப்பிட்டு ‘தலைவரு நிரந்தரம்’ என்று பதிவிட்டுள்ளனர். இப்பதிவியை பார்த்த ரஜினி ரசிகர்கள் செம்ம குஷியில் பதிவிட்டு இருக்கின்றனர்.
👑 Thalaivaru nerandharam 👑
The wait finally ends today with #Jailer 😍 pic.twitter.com/tWELZJ4h78
— Google India (@GoogleIndia) August 10, 2023