
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.