
சென்னையில் புயல் காரணமாக டிசம்பர் 4 இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஏழு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு பத்து மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் பயணிகள் இதனை அறிந்து தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது