
சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல் நாளை அதாவது ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மண்டலம் 5-ல் உள்ள கோடம்பாக்கம், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். இதேபோன்று ஓட்டேரி, கொண்டி தோப்பு, சேப்பாக்கம், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வால்டாக்ஸ் சாலை, முத்தியால்பேட்டை, ஜார்ஜ் டவுன், சௌகார்பேட்டை, பெரிய மேடு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
அதன் பிறகு மண்டலம் 6-ல் உள்ள வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், செம்பியம், அயனாவரம் ஆகிய பகுதிகளிலும், மண்டலம் 8-ல் உள்ள கெல்லிஸ், மண்டலம் 9-ல் உள்ள திருவல்லிக்கேணி, மண்டலம் 10-ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் அவசர தேவைகளுக்கு https://cmwssp.tn.gov.in என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.