தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை போக்க சென்னையிலிருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வழியாக நாளை காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மீண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.