சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் விதமாக இரண்டாம் கட்ட ரயில் திட்ட பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. இந்த பணிகளை வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது சென்னையில் 40 இடங்களில் நடைபெற்ற வரும் நிலையில் இதன் காரணமாக வழக்கமான போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தற்போது அசோக் நகர் பகுதியில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகரிலிருந்து கேகே நகர் மற்றும் வளசரவாக்கம் வரை போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துரைசாமி சுரங்கப்பாதை, தம்பையா சாலை, வீராசாமி தெரு மற்றும் அசோக் நகர் 5வது நிலச்சாலை வழியை செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் அசோக் நகர் 2,3,8 அவென்யூ வழியாக செல்லலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.