
தமிழக அரசானது மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்க திட்டத்தை அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமைந்துள்ள விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் விளையாடும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. தமிழக அரசு சார்பாக சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மெகா விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.
ஹாக்கி, டேபிஸ் டென்னிஸ், நீச்சல் குளம் என 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் இந்த திட்டத்தில் அமையவுள்ளன. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான அறைகள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.