
சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து phase-2 திட்டத்தின் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, மாதாவரம் பால்பண்ணை முதல் சோளிங்கநல்லூர் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இரண்டாம் கட்ட பணி முடிவடைந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதில் சுரங்கம் தோன்றும் பணிகளுக்கு பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு தமிழ்நாட்டின் சிறப்புமிகு மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்கள் சூட்டுவதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழக்கமாக வைத்திருக்கிறது. மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 42.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை செல்கிறது. இதற்காக 23 சுரங்கம் தோன்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
நீலகிரி, பொதிகை
கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் மாதவரம் பால் பண்ணை காலனி முதல் மாதவரம் ஹை ரோடு வரையிலான சுரங்க பணிகளில் ஈடுபட்டுள்ள இரண்டு இயந்திரங்களுக்கு நீலகிரி, பொதிகை என பெயரிடப்பட்டுள்ளது.
காவேரி
கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ ரயில் நிர்வாகம் அருகே ஆரியபுரம் மாநகராட்சி மைதான பகுதியில் பிப்ரவரி 16-ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கிய இயந்திரங்களுக்கு காவிரி என பெயரிடப்பட்டிருக்கிறது.
அடையாறு
மேலே கூறப்பட்டுள்ள பகுதியில் வரும் மார்ச் முதல் பணியை தொடங்கும் புதிய இயந்திரத்திற்கு அடையாறு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆனைமலை, சேர்வராயன்
மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும் இரண்டு இயந்திரங்களுக்கு ஆனைமலை, சேர்வராயன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நொய்யல், வைகை
கிரீன்வேஸ் சாலையில் முதல் மந்தைவெளி வரையிலான சுரங்கம் தோன்றும் பணிகளில் ஈடுபடும் இயந்திரங்களுக்கு நொய்யல், வைகை என பெயரிடப்பட்டுள்ளது.
கல்வராயன், மேலகிரி
அயனாவரம் முதல் பெரம்பூர் வரை நடைபெறும் சுங்கப்பணிகளில் ஈடுபட்டுள்ள இரண்டு இயந்திரங்களுக்கு கல்வராயன், மேலகிரி என பெயரிடப்பட்டுள்ளது.
சிறுவாணி, பவானி, தாமிரபரணி, பாலாறு
சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் ரோடு மற்றும் கே.எம்.சிவரை சுரங்க பணிகளில் ஈடுபட்டுள்ள நான்கு இயந்திரங்களுக்கு பாலாறு, பவானி, தாமிரபரணி, சிறுவாணி என பெயரிடப்பட்டுள்ளது.
கொல்லி
அயனாவரம் முதல் ஓட்டேரி வரை நடக்கும் சுங்க பணிகளில் ஈடுபட்டுள்ள இயந்திரங்களுக்கு கொல்லி என பெயர் சூட்டி உள்ளனர்