தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் அன்போடு தல என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் இளமையாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காதல் மன்னன் போன்ற படங்களில் நடிகர் அஜித் மிகவும் இளமையாக இருப்பார். ஆனால் சில வருடங்களாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களில் அவரை இளமையான தோற்றத்தில் காண முடியவில்லை. அதாவது நடிகர் அஜித் தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதால் படப்பிடிப்பிலும் அவ்வாறே கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தில் மிகவும் இளமையாக நடித்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய உடல் எடையை கூட குறைத்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.