
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இவருக்கு சமீபத்தில் தசரா படத்தில் நடித்ததற்கான சிறந்த கதாநாயகி விருது பிலிம்பேர் அவார்டில் வழங்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தின் Uppu Kappurambu என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் முடிவடைந்த நிலையில் பட குழுவினர் அனைவரும் கடைசி நாளில் போட்டோ எடுத்ததோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் சுஹேஷூடன் எடுத்த போட்டோ மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.