
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநாட்டை உற்று நோக்கி கவனித்து வருகிறது. நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக மாநாட்டில் கூட்டம் அலைமோதும். நடிகர் விஜய் மாநாட்டுக்கு வருபவர்கள் கட்டுப்பாடுடனும், போலீசாரின் விதிமுறைகளை கடைபிடித்தும் வரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு மாநாடு நடைபெறும் இடத்தில் வீர மங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட பெண் போராளிகளின் கட்டவுட் மற்றும் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் கட்டவுட் போன்றவைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதோடு நடிகர் விஜயின் கட் அவுட்டும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நாளை மாநாடு நடைபெறும் நிலையில் இன்று விக்கிரவாண்டிக்கு நடிகர் விஜய் கிளம்புவதாக கூறப்படுகிறது. மேலும் மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காகவும் ஒரு நாள் முன்னதாக சென்று பணிகளை மேற்பார்வையிட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.