
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் தற்போது கொரட்டல் சிவா இயக்கத்தில் தேவாரா பார்ட் 1 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் சைப் அலிகான் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகும் நிலையில் தற்போது படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகர் ஜூனியர் என்டிஆர் இரு வேடங்களில் நடித்துள்ள தேவாரா படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.