பொதுவாக உடற்பயிற்சி உடலை பேணி பாதுகாக்கும் என்பது உண்மைதான். இதனால் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஜிம் மரணங்கள் என்பது அதிகரித்து வருவது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.

அந்த வகையில் தற்போது 20 வயதான பாடி பில்டர் பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பாடி பில்டர் ஜோடி வான்ஸ். பொதுவாக போட்டிக்கு முன்பாக உடல் கட்டுக்கோப்பாக தெரிய சில மணி நேரத்திற்கு முன்பாக நீர் அருந்துவதை தவிர்ப்பார்கள். ஆனால் இவர் அதிகப்படியாக அதை கடை பிடித்துள்ளார். இதனால் உடம்பில் நீர்ச்சத்து குறைந்து இதயம் செயலிழந்து மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.