நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீமானுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்பிறகு நாம் தமிழர் கட்சியிலிருந்து கிட்டத்தட்ட ஏராளமான நிர்வாகிகள் விலகியும் வருகிறார்கள். கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதோடு சீமான் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் வளரக்கூடாது என்று நினைப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய அவருக்கு எதிர்ப்புகள் என்பது கிளம்பிய நிலையில் போராட்டங்கள் கூட வெடித்தது. மேலும் இந்த நிலையில் தற்போது சீமானின் புகைப்படத்தை பெண்கள் உட்பட சிலர் கூட்டமாக நின்று பலர் துடைப்பதால் அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jaya Raman Dmk (@jayaraman_dmk)