இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதே சமயத்தில் சில வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் உள்ள ஒரு தெருவில் 5 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது சில குரங்குகள் அந்த சிறுவனை சூழ்ந்து கொண்டு கடித்து குதறி தாக்கியது. இதனால் பயந்து போன அந்த சிறுவன் வலியால் அலறி துடித்தான். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து குரங்குகளை விரட்டினர். அதன் பின் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.