
தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பசுபதி மாரி ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள வாட்டர் டேங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே சக காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இறப்பினும் நேற்று பசுபதி மாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.