மனேசரில் உள்ள VVDN Technologies நிறுவனத்தின் SMT லைன் திறப்புவிழாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “Made in India” டேப்லெட்டை அறிமுகப்படுத்தினார்.

இந்த டேப்லெட்டின் வலிமையை நிரூபிக்க, தன்னோறாக அதை தரையில் வீசியும், கையில் உடைக்க முயற்சித்தும், இறுதியாக அதற்கு மேல் நின்றும், அதன் சக்தியைச் சோதித்தார்.

பின்னர் மற்றவரையும் அதேபோல் நின்று பார்க்கச் சொல்ல, டேப்லெட் உடையாமல் இருந்ததைப் பார்த்து “இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது உடையாது” என உரிமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டையும், நகைச்சுவை மீம்ஸ்களையும் பெற்றுள்ளது. இதனை ஒட்டியே, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை பகிர்ந்துள்ளார்.

தற்போது உற்பத்தி மதிப்பு ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பும் ரூ.3.25 லட்சம் கோடிக்கு மேலாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சுமார் 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.