
கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் என்றும் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களால் கையாளப்படும் கணக்குகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் செயல்படுத்தாமல் விட்ட கூகுள் கணக்கு உங்களிடம் தற்போது இருந்தால் அதனை ஆக்டிவேட் செய்ய இந்த வழிமுறையை பயன்படுத்துங்கள். ஒருவேளை பழைய கணக்கு உங்களுக்கு தேவையில்லை என்று நினைத்தால் அதனை அப்படியே விட்டு விடலாம்.
சம்பந்தப்பட்ட கூகுள் கணக்கின் மின்னஞ்சலை படிப்பது அல்லது புதிய மின்னஞ்சலை அனுப்பலாம்.
கூகுளில் உள்ள தலங்களை சம்பந்தப்பட்ட கணக்கிலிருந்து பயன்படுத்தலாம்.
செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்வது.
கூகுள் கணக்கில் இருந்து மூன்றாம் தரப்பு தளத்தை sign in செய்து youtube வீடியோவை பார்ப்பது.
ஒருவேளை சம்பந்தப்பட்ட கணக்கில் இருந்து ஏதாவது சந்தா செலுத்தப்பட்டு வந்தாலும் கூகுள் அந்த கணக்கை நீக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.