
திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பக்தர் ஒருவர் வரிசையில் குறுக்கே நுழைய முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்ததும் ஜீயபுரம் டிஎஸ்பி பழனி அந்த பக்தர் குடும்பத்தினருடன் வந்திருந்ததை பாராமல் போடா நாயே…
திருச்சி: பங்குனி உத்திரத்தையொட்டி வயலூர் முருகன் கோயிலில் வரிசையில் குறுக்கே வர முயன்ற பக்தரை ஜீயபுரம் டிஎஸ்பி தகாத வார்த்தையில் திட்டிய அதிர்ச்சி வீடியோ#JeeyapuramDSP | #DSPPalani | #Trichy | #VayalurMuruganTemple | #Vayalur | #PanguniUthiram pic.twitter.com/yD4tPSqaBR
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 12, 2025
ஒழுக்கமா வரிசையில் வாடா நாயே என திட்டி உள்ளார். மேலும் செருப்பைக் கொண்டு இங்கேயே அடித்து விடுவேன். இவன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் திட்டினார்.
மக்களை வரிசையில் அனுப்புவதற்கு பதில் தரக்குறைவாக பேசுவது ஏற்புடையது அல்ல என மக்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.