
செல்பியால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா பேஸ்பால் மட்டையால் தாக்க முற்படும் வீடியோ வைரலாகி வருகிறது..
பிருத்வி ஷாவின் நண்பரின் புகாரின்படி, புதன்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இரண்டு ரசிகர்கள் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் – செல்ஃபிக்காக கிரிக்கெட் வீரரை அணுகியதைத் தொடர்ந்து சண்டை தொடங்கியது.
கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா புதன்கிழமை (நேற்று) இரவு மும்பை சான்டாக்ரூஸில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுடன் இரவு உணவிற்குச் சென்றார். அப்போது ரசிகர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுடன் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். ஆனால் அவர்கள் பிருத்வி ஷாவை மேலும் புகைப்படம் எடுக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிருத்வி தனது நண்பர்கள் மற்றும் ஹோட்டல் மேலாளரை அழைத்து அவர்களை கட்டுப்படுத்தும்படி கூறினார். ஹோட்டல் நிர்வாகம் அவர்களை ஓட்டலில் இருந்து வெளியேற்றியது. ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த தம்பதிகள், பிருத்வி ஷா சென்ற பிறகு அவரது காரைப் பின்தொடர்ந்தனர்.
மும்பை சாலையில் கார் மறிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரித்வி ஷா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பிருத்வி ஷாவின் நண்பர் அளித்த புகாரில், ஹோட்டலில் செல்ஃபி கேட்டு பிருத்வியை இரண்டு பேர் துன்புறுத்தியுள்ளனர். சாப்பிடக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் சொன்னோம், அவர்கள் இருவரையும் வெளியேற்றினர்.
நாங்கள் ஹோட்டலை விட்டு வெளியேறும்போது, இருவரும் பேஸ்பால் மட்டைகளுடன் இன்னும் சிலருடன் காத்திருந்தனர். எங்கள் காரை அடித்து சேதப்படுத்தினர். அங்கிருந்து உடனே சென்றதும் பெட்ரோல் நிலையம் அருகே எங்களை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரூ 50,000 தராவிட்டால் போலீசில் பொய் புகார் கொடுப்பதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 143 (சட்டவிரோத கூட்டம்), 148 (கலவரம்), 384 (பணம் பறித்தல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) மற்றும் பிறவற்றின் கீழ் ஓஷிவாரா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சனா (எ) ஸ்வப்னா கில் என்ற பெண்ணிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அந்த பெண்ணை முதலில் தாக்கியது பிருத்வி ஷாவின் நண்பர்கள் தான் என்று சனாவின் வழக்கறிஞர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய சப்னா கில் வழக்கறிஞர் அலி காஷிப் கான், அந்தப் பெண்ணை பிரித்வி ஷா தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமதி கில்லின் தோழி படமெடுத்த வீடியோவில், உடைந்த பேஸ்பால் மட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கும் திரு ஷாவுடன் அவர் போராடுவதைக் காட்டியது. “சப்னா ஓஷிவாரா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை” என்று கான் கூறினார். அதே நேரத்தில் பிருத்வி ஷாவுக்கு எதிராகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
BREAKING : #PrithviShaw 'selfie' attack case: Influencer #SapnaGill arrested for allegedly assaulting cricketer. pic.twitter.com/Yt4eQaqNnV
— Vishwajit Patil (@_VishwajitPatil) February 16, 2023
இந்த சண்டையின் ஒரு பகுதியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிருத்வியையும் அவரது நண்பரையும் தாக்கியதாகவும், அவரது காரின் கண்ணாடியை உடைத்ததாகவும் போலீஸ் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் இதை தெளிவாக படம் பிடித்துள்ளார்.
அதாவது 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வெள்ளை நிற கார் அவர்களின் வாகனத்தை துரத்தியதாயாகவும் , அதிகாலை 4 மணியளவில், லிங்க் ரோட்டில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே அவரது காரை யூ-டர்ன் எடுத்தபோது அவரைப் பின்தொடர்ந்தவர்கள் அவரைத் தாக்கினர் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் பேஸ்பால் மட்டையை பின்புற கண்ணாடியில் அறைந்ததால் அது உடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரும், ஒரு பெண் உட்பட காரில் இருந்த இருவர், யாதவ் மற்றும் அவருடன் வந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
Kalesh B/w Prithvi Shaw And Influencer Sapna Gill on Roadpic.twitter.com/QI88XpqHuX
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 16, 2023
Hustle video of #Cricketer #Prithvishaw & #influencer #Sapnagill outside Barrel mansion club in vile parle east #Mumbai, it is said that related to click photo with cricketer later whole fight started. @PrithviShaw @MumbaiPolice @DevenBhartiIPS @CPMumbaiPolice @BCCI pic.twitter.com/6LIpiWGkKg
— Mohsin shaikh 🇮🇳 (@mohsinofficail) February 16, 2023
@PrithviShaw and his friend drove off, Fans chased the car, intercepted it at a traffic signal near Oshiwara and broke the windshield the complaint said.#PrithviShaw #IndianCricketTeam pic.twitter.com/kfHK3CYPVz
— Amit Sahu🇮🇳 (@amitsahujourno) February 16, 2023