இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, தனது கூலான , அற்புதமான மற்றும் எளிமையான இயல்புக்காக உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்தியா கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வந்த இந்த ஜார்கண்ட் வீரர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக உள்ளார். தன்னை சந்திக்கும் ஒவ்வொரு ரசிகருடனும் மனித நேயத்துடன் நடந்து கொள்ளும் தோனியின் அழகான செயல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த தோனியை பார்த்து, வீல் சேரில் இருந்த ஒரு பெண் ரசிகை செல்ஃபி கேட்டு அன்புடன் அழைத்தார். இதனைப் பார்த்த தோனி, எந்த தயக்கமுமின்றி அவரது மொபைலை எடுத்து, அவருடன் ஒரு இனிமையான செல்ஃபி எடுத்தார். இந்த செயல் அந்த ரசிகையை மட்டுமல்லாது, இணையத்தில் பார்ப்பவர்களையும் நெகிழச் செய்துள்ளது. தோனியின் எளிமைக்கும், மனப்பான்மைக்கும் நெட்டிசன்கள் பாராட்டுகளை வழங்கி வருகின்றனர்.