
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பில்லி என்ற பகுதி உள்ளது. இங்கு 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி செல்போனில் snapchat ஆப்பை டவுன்லோட் செய்துள்ளார். அப்போது தந்தை அந்த ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கோபமடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை சிறுமியின் குடும்பத்தினர் மறுநாள் தான் பார்த்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.