உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும், டெல்லி உடல் உறுப்பு தான சங்கமும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் உடல் உறுப்பு தானம் மனித இயல்பின் உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டு என்றார்.

உடல் உறுப்பு தானம் என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை என்றும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டு என்றும் அத்துடன் உடல் உறுப்பு தானத்தின் மூலம் இன்னொருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரிடமும் செல்போன் இருக்கும் என்று நீங்கள் எப்பவாவது நினைத்திருக்கிறீர்களா? இன்று கிராமத்தில் கூட அனைத்து மக்களும் செல்போன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய தொடங்கி விட்டனர். அதைப்போல் ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் என்ற உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.