சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவருக்கு 2 1/2 வயதுடைய திலகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திலகரை கடந்த 14-ஆம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று முன்தினம் திலகர் செல்போனை வைத்து வீடியோ பார்த்துக்கொண்டே ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான்.

இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவர்களிடம் விஷயத்தை கூறியுள்ளனர். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது நாணயம் சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் மருத்துவர்கள் நாணயத்தை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றி விட்டனர்.