கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி மற்றும் மவுனேஷ் இருவரும் கடந்த ஒன்றரை மாதங்களாக கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது லட்சுமி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மவுனேஷ் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவருடைய செல் போன் நம்பரை லட்சுமி பிளாக் செய்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமியின் வீட்டிற்கு அவர் சென்ற நிலையில் திடீரென ஜன்னலை திறந்து அவர் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமி மீது ஊற்றினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் லட்சுமி மற்றும் அவருடைய மகளுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மவுனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.