சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது. தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை ஒரு நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய UPC எண் ஒதுக்கப்படும். அதன்பின்னர் குறைந்தபட்சம் 10 நாட்கள் காத்திருந்த பிறகு தான் புதிய நெட்வொர்க்கிற்கு மாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என TRAI உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முதலில், போர்ட் செய்ய வேண்டிய மொபைல் எண்ணில் இருந்து PORT ஸ்பேஸ் 10 இலக்க மொபைல் எண்ணை பதிவிட்டு, 1900 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். உதாரணமாக, PORT 9999999999. பிறகு, தனித்துவமான UPC கோட் கிடைக்கும். இதை எந்த நெட்வொர்க்கு மாறுகிறமோ, அந்த அலுவலகத்தில் காண்பித்து, அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால், புதிய சிம் கார்டு தருவார்கள். போர்ட் ஒப்புதல் கிடைத்ததும் புதிய சிம்மை பயன்படுத்தலாம்.