உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் 14-ஆவது பாட்டாலியனில் பிந்த் ராய் என்பவர் வேலை பார்க்கிறார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் ராய் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். அவர் காமாக்யா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் முன்பதிவு செய்தார். இந்த நிலையில் வருவதற்கு தாமதமானது. அதற்குள் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் மிதமான வேகத்தில் நகர்ந்த ரயிலில் செல்போன் பேசியபடி ராய் ஏற முயன்றார்.

அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி தண்டவாளத்தில் உருண்டு விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனையடுத்து படுகாயம் அடைந்த ராய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.