இந்த வருடத்திற்கான ஐபிஎல் 18 வது சீசன் ஆனது கொல்கத்தா ஈர்டன்  கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூர் அணி ஆனது வெற்றி பெற்றது. நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் போட்டி தொடங்குவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் நடிகரும் கொல்கத்தா அணையின் உரிமையாளரருமான ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து தொகுத்து வழங்கினார். அதன் பிறகு பாலிவுட் நடிகை திஷா பாதாணி கவர்ச்சி டான்ஸ் ஆடினார். ஆனால் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது இந்த டான்ஸ் வீடியோவை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒளிபரப்பில் கட் செய்துவிட்டு கமெண்டரி வீடியோக்களை ஒளிபரப்பினார்கள். இதனையடுத்து  இதுகுறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள். மேலும் திஷா பதானி என்ற ஹேஷ் டேக்கும் வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.