தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக விரைவில் விடாமுயற்சி பட குழு அர்பைஜான் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மகனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். மேலும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அஜித் தற்போது மகனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.