புதுச்சேரி காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ திருமால்(32). இவரது மனைவி நந்தினி(30). இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்தின் போது நந்தினி குடும்பத்தினர் வரதட்சணையாக 25 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர்.

ஆனால் செல்வ திருமால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து நந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி செல்வத் திருமாலுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்