
வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது பலருக்கு பிடிக்கும். ஒரு சில வீடுகளில் செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல தான் நடத்துவார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு குடும்பத்தினர் செல்லப்பிராணியாக நாயை வளர்த்தனர். இந்த நாயின் பெயர் லூனா. இந்த நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நாய்க்குட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது நாய்க்குட்டியின் வயிற்றில் பல காலுறைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நாய்க்குட்டியின் வயிற்றில் இருந்த 24 ஜோடி காலுறைகளை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நாய்க்குட்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.