கடந்த மார்ச் மாதம் ஈரோடு நசியனூரில் காரில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி ஜான் சாணக்யா வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  பூபாலன் மற்றும் சதீஷ்ஆகியோரை கைது செய்தனர்.

பூபாலன் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது சேலம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.