
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு வாரியர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது புடவையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை மஞ்சுவாரியர் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு சேலை என்பது வெறும் ஆடை அல்ல. அது ஒரு மொழி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
A saree is not just a garment. It's a language ❤️#saree #sareelove pic.twitter.com/p3anzEQ7DU
— Manju Warrier (@ManjuWarrier4) February 26, 2023