தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்த சுசித்ராவுக்கு ஒரு காலத்தில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. அதாவது சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சையின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். சமீபகாலமாக நடிகர் நடிகைகள் குறித்து பல அந்தரங்க விஷயங்களை சுசித்ரா ஓப்பனாக பேசி வருகிறார். அவர் பல நடிகர் மற்றும் நடிகைகளின் மோசமான விஷயங்கள் குறித்து பேசும் நிலையில் தற்போது நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா சினிமாவில் மிஸ்டர் க்ளீன் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அவர் இப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்தது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

அதாவது அவர்கள் இருவரும் தங்களுடைய கற்பை யாரும் தொடாதவாறு காப்பாற்றிக் கொள்வார்களாம். ஆனால் இதற்காக அவர்கள் இருவரும் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா இருவரது வீட்டில் ஏதேனும் பார்ட்டிகள் நடந்தால் கூட இருவரும் தனியாக நின்று தான் நேரத்தை செலவிடுவார்களாம். நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை இணைத்து சுசித்ரா சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் அப்படி இருக்கும்போது தற்போது சூர்யா மற்றும் விஜய் இருவரும் சொக்கத்தங்கம் என்று அவரை பாராட்டியுள்ளது ஆச்சரியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.