தமிழ்நாடு அரசு சார்பாக ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டம் தோட்டக்கலைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 55 ஆயிரத்து 600 ரூபாயும், பெரிய விவசாயிக்கு ஏக்கருக்கு 43 ஆயிரத்து 900 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே அரசு வழங்கும் மானியத்தில் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி உள்ள விவசாயிகள் ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் இந்த திட்டத்தில் மீண்டும் பயன்பெற முடியும். மேலும் https://t horticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.