ஐபிஎல் 2025 தொடரில் நேற்று (ஏப்ரல் 25) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் SRH அணிகளுக்கிடையிலான போட்டியில், SRH உரிமையாளர் காவ்யா மாறன் தனது முகபாவனைகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 155 ரன்கள் இலக்காகக் கொடுக்கப்பட்ட நிலையில் SRH தொடக்கமே சிக்கலாக இருந்தது. அபிஷேக் சர்மா இரண்டு பந்துகளில் டக் ஆகிய வெளியேறினார். ஆனால் இஷான் கிஷன் சிறப்பாக ஆடி, SRH அணியை முன்னேற்றினார்.

 

ஆனால் இஷான் கிஷன் தனது விக்கெட்டை எளிதாக வீணடித்தார். 12வது ஓவரின் கடைசி பந்தில், நோர் அக்மட் வீசிய குறுகிய பந்தை புல் செய்ய முயன்ற இஷான் கிஷன், பந்தை மிகவும் தட்டையாக அடித்துவிட்டார். சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சாம் கரன், சிக்கலான நிலையில் பந்தைப் பிடித்து விக்கெட்டை கைப்பற்றினார். இஷான் கிஷன் 34 பந்துகளில் 44 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்துவிட்டு வெளியேறினார். அந்த தருணத்தில் ஸ்டாண்டில் இருந்த காவ்யா மாறன், நம்ப முடியாத அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை முகபாவனையில் வெளிப்படுத்தினார்.

 

இஷான் கிஷன் வெளியேறியதும், SRH அணியின் நிலைமையும் குலைந்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்ஸும் 19 ரன்னில் ஆன்ஷுல் காம்போஜின் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ஃபார்மில் இருந்த ஹெயின்ரிச்ச் கிளாசனும் வெறும் 7 ரன்னில் பெவிலியனுக்குத் திரும்ப, SRH வது ஓவரில் 54/3 என்ற நிலைமையில் தடுமாறியது. இஷான் கிஷன் மற்றும் அனிகேத் வர்மா இணைந்து ஓரளவுக்கு அணியை நிலைநிறுத்த முயற்சித்தனர். இருப்பினும் இஷான் வெளியேறியதும், காவ்யா மாறனின் முகபாவனை SRH அணியின் நிலையை தெளிவாக காட்டியது.

 

அந்த சமயத்தில் தோனியின் மனைவி சாக்ஷியின் ரியாக்ஷனும், காவியா மாறனின் ரியாக்ஷனும் ஹைலைட்டானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இறுதியில் 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு சென்னையை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.